உலகில் உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு... அம்மா திட்டும் போதும் சிரிக்கிறேன் நான்... அரை மணி நேர அர்ச்சனைக்குப் பின்னும் கேட்டேன், "அவ்வளவு தானா அம்மா ? " இத்தனை நாளாய் , முறைக்கக் கூட யோசித்த நடத்துனரும் - கேட்கிறார் "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா...? மேல ஏறுடா..." இயந்திரத்தனமாய் இருந்தவனிடமும் இதயம் இருக்கிறது என்பதை கண்டு பிடித்துச் சொன்னவளே... உலகில் உள்ள அத்தனைப் பெண்களும் உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு...

No comments:
Post a Comment