Thursday, 26 July 2012

பசுமை


காதோடு காது வைத்து ,
கிசு கிசுத்த நாட்கள்…
கானா தூரத்தில் இருந்தாலும்,
கண்ணோடு கண் பேசிய நாட்கள்…
----
தனிமையில் இருந்த போதும்,
என் உயிர் தீண்டும் உன் ஸ்பரிசம்…
----
வறுமையில் வாடிய போதும்,
பசுமையாய் இருந்தது வாழ்க்கை…
----
பணத்தில் பசுமையாகிய பின் – ஏனொ
எனக்குத் தோன்றுகிறது – வெறுமையும்
உள்ளூர ஒரு வறுமையும்… !


----

Monday, 23 July 2012

பெண் 

பெண் 
-------------

தோகை மயிலாள்
என் சோகம் பொடித்தாள் ;
வாகை சூடி மகிழ
ஒர் வாழ்க்கை கொடுத்தாள்;
துயில தூளியும் கொடுத்து,
விழிக்க ஒளியும் கொடுத்து ...
எதையும் பாராமல் -
எல்லாமுமாய் என்னோடு
கலந்து நிற்பவளைப் போல்...
கண்டதுண்டா நீங்களும் ...?

கவனிக்க மறந்திருக்ககூடும்
உங்கள் வாழ்க்கையிலும் -
தாயாய், தாரமாய் , 
தமக்கையாய் ,தோழியாய் - ஏதொ
ஒரு ரூபத்தில் பெண் -

உங்கள் அன்புக்காக ,அங்கீகாரத்திற்காக 
காத்திருப்பதை ...

கண்டுணரும் போது 
உயிரோட்டம் வரும்,
உங்கள் உங்களுக்குள்ளும் ...

அன்புடன்,
RJ ராஜா (எ) சுந்தர இராஜசேகரன்.


கதம்பம் இதழில் இடம்பெற்றது!


நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...