உன் மணம் வீசும் மனம்
-------------------------------------------------
மணம் வீசும் மனம்,
என் மனதில் என்றும் வீசும்
உன் மணம்!
உனக்குத் தெரியுமா ?
வாழ வேண்டும் என்ற ஆசை
உன்னாலேயே இன்னும் மிச்சம் இருக்கிறது....
கற்பனையில் வாழாதே என்று
படித்துப் படித்து உனக்குச்
சொன்ன - நான் ...
உன்னை -
கற்பனையில் ஸ்பரிசிக்க பழகிக்கொண்டேன்....
கற்பனையில் ரசிக்கவும் பழகிக்கொண்டேன்...
சில நேரங்களில் , அல்ல அல்ல
பல நேரங்களில்
கற்பனையிலேயே வாழவும்
கற்றுக் கொண்டேன்....
எங்கோ ஒரு மூலையில்
உன் விருப்பப்படி - நீ
வாழ்கிறாய் என்பதைவிட
எனக்கு
மகிழ்ச்சியைத் தருவது
வேறு எதுவும் இல்லை...
என் பயமெல்லாம் -
நிஜத்தில்
உன் தேவை
எனக்கு இல்லாமலே
போய் விடுமோ என்பதல்ல....
என் தேவை உனக்கு
இல்லாமலே போய்விடுமோ
என்று தான்...
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கை யா! -
என்
அன்புக்கினியவர்களுக்காக
நான் வாழும்
பொருளுக்கான வாழ்க்கையா....?
என்னவெல்லாமோ சொல்லவேண்டும்...
உணர்வுகளும் கொஞ்சம்
வலிகளும் உண்டு...
ஆனால் வார்த்தைகள்
வந்து விழ
வழியைதான்
காணவேயில்லை...
என் மனத்தில
உன் மணம் வீசாத நொடிகளுமில்லை!
ஆக்கியோன்
RJ ராஜா (எ) சுந்தர இராஜசேகரன்
விர்ஜினியா
படிக்க பட்டது.
ரிச்மண்ட் தமிழ் சங்கம் கதம்பம் இதழில் பிப்ரவரி 2022 வெளியிடப்பட்டது.
மிகவும் அருமை.. உங்கள் உணர்வுகள் புரிந்து உள்ளத்துக்குள் வலிக்கிறது.. மனமோ பாராட்டி மகிழ்கிறது
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
Delete