Thursday, 12 April 2018

இசையராஜா






தனிமை என்னை
தின்றுவிடாமல் இருக்க
தாயாக இருப்பவரே....
தாலாட்டு கேட்டதாக
நினைவில்லை....
தாயாக நீ இசை மடி தந்தது நினைவை விட்டு நீங்கிவிட நியாயமில்லை...
நண்பர்களின்றி நகர்ந்த நாட்களுண்டு...
தாயே நீ தந்த இசை கேட்காமல் நான் துயின்ற நாட்களுண்டா ?
என்ன தவம் செய்தேனோ....
எந்தை உனை ர(ரு)சிக்கும் ஞானம் பெற்றேன்...
வாழ்க்கைக்கோர் அர்த்தம் பெற்றேன்...
பண்ணையபுரத்திலிருந்து பண்ணிசைக்க வந்தவரே....
பல நூறு இதயங்கள் நொறுங்காமல் காத்தவரே....
பணம்தேடி ஓடும் பரதேச வாழ்வில்...
மனம் மரித்து விடாமல்      காத்து நிற்கும் காவல தெயவமே...
நான் உயிர்ப்போடு வாழ ஒரு காரண தேவனே...
இசை வாணனே...
உன் பாத வணக்கங்கள்.
−இராஜசேகரன்
இசை தெய்வத்திற்கு என் எளிய காணிக்கை

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...