Saturday, 6 June 2020

தனிமை 11 - ( என் கன்னங்களில்... !? )

 


வாழ்வில்

எத்தனையோ சுவைகள் எனக்கு...

பயம்; ஏக்கம்; ஏளனம்; கோபம்; சோகம்; அமைதி! மகிழ்ச்சி; ஆனந்தம்! காதல் - சில நேரங்களில் 
சுகப்பட்ட தனிமை!

இன்று - 
சுமையாகி விட்ட அதே தனிமை
ஒருவேளை தின்றுவிட்டு இருக்குமோ என்னையும் என் உயிர்ப்பையும் !?

இப்பொழுதெல்லாம் -
 எனக்கு தெரிவதே இல்லை
 எந்த ஒரு வலியும்!

ஒருவேளை -
 மரத்துப் போய் இருக்கலாம்!


இப்படியெல்லாம் -
 ஏதேதோ எண்ணிக் கொண்டு
 நான் இருக்கையில்

நிதர்சனத்தில் நிழல் என
 ஓடிக்கொண்டிருந்த குறும்படத்தில்
 தோய்ந்து போய்....


அதில் தொக்கி நிற்கும்
 சின்னஞ்சிறு உணர்வுகளுக்கு எல்லாம்
 என் கட்டுப்பாடு இன்றியே
 கசிந்து கொண்டிருந்தது கண்ணீர்...


கண்ணம் தொட்டு கசியும்
 கண்ணீருக்கு நன்றி!
அன்றும் இன்றும் என்றும் என்னோடு!


நான் உதிர்ந்து விடாமலும் 
 உலர்ந்து விடாமலும் 
உயிர்ப்போடுதான் இருக்கிறேன் என்பதை...
உரக்க சொல்லி உலர்ந்து போனது
 கண்ணீர் என் கன்னங்களில்!


அன்புடன் உங்கள்.

சுந்தர ராஜசேகரன்.

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...