Wednesday, 30 October 2019

எங்க ஊரில் மழை


மண்ணின் வாசமும்...

கீற்று வீட்டின் மழையின் தாளமும்...

அம்மாவின் அருகாமையும்...

அவள் கையால் தரும் தேநீரும்...

சிறு கிண்ணத்தில் தீனியும்...


#சொர்கம்

#miss my land!

Tuesday, 15 October 2019

தனிமை ( பகுதி 7 )





அவள் தூரமாக இருக்கும்போது பார்ப்பதற்கு பிடித்தது....

அவள் கேட்க தயாராக இல்லாதபோது உரக்க கத்தி காதல் சொல்ல வேண்டுமென துடித்தது.....


கைக்கு எட்டுமோ என்று இருந்தபோது தெரியாமல் அவள் கை தொட்டது பிடித்தது...

கத்தரி வெயில் உயிரை வாட்டும் போது கூட காற்றில் வரும் அவள் வாசம் பிடித்தது....


இன்று கைப்பிடித்த பின்னரும் கைக்கு எட்டாத தூரத்தில் நீ...

கானா தூரத்தில் உட்கார்ந்து கொண்டு காற்றில் உன் வாசம் தேடுகின்றேன் நான்...


இதை தனிமை என்று கூறுவதா இல்லை அதையும் தாண்டி....


எது நடந்தாலும் அதில் எங்கோ உனக்கான ஒரு நினைவு ஒளிந்தே இருக்கிறது...


 இதயத்தில் நினைவுகளில் ஏன் எல்லாவற்றிலும்...
என்னோடு கூடவே நீ....

ஆனால் தனித்து இருப்பதை போன்ற ஒரு வலி எப்போதும்...

இருந்தும் நான் சிரித்து இருக்கிறேன்...
இல்லையில்லை சிரிப்பில் அந்த வலியை மறைத்து இருக்கிறேன்....


அன்புடன்
ராஜ்

Friday, 11 October 2019

Don't scold me !

Hey dear,

You scold me! That go to hell!
It is very simple!
Just leave me alone;
Without your presence every minute is a hell for me!

But,
Come back quickly! Because,
None of fish will live without water;
Such I can't without you!

You the water and I am that poor fish!

Love you.

Thursday, 10 October 2019

ஆசை

காதோரம் ஆடும் அந்த அழகு முடி
கண்டு விடவும்

அவள் பேசும் போது ஆடும் காது ஜிமிக்கி கண்டு விடவும்...

முறுவல் பூக்கும் நேரம் அவள் கண்ணம் மீது கன்னம் வைத்து விடவும்...

கால நேரம் போவது தெரியாமல் கதைத்திருக்கவும்...


அவள் தூங்க என் தோள் கொடுத்திருக்கவும்...

அவள் செல்ல கோவம் கொண்டு என்னை அடித்திருக்கவும்....

அதற்காக பொய்யாக அழுதிருக்க அவள் மடியில் முகம் புதைக்கவும்...

கொஞ்சம் தூரமாக இருந்து அவள் தூங்கும் அழகை அமைதியாக ரசித்து இருக்கவும்...


காலை அவள் உறக்கம் கலைந்து எழும் போது ...

உறங்கி விட்டது போல நான் நடித்து இருக்கவும் ...

இன்று எனக்கான நினைவுகளே அவளுக்கு இல்லை என்பதை மறந்திருக்கவும்...

ஆசை எனக்கு...

நிராசையோ தேவா!

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...