Wednesday, 15 August 2012

சூரியகாந்தி


சூரியனை தழுவிட -
முடியாதெனத் தெரிந்தும்
காதல் கொண்டது சூரியகாந்திப் பூ…!

காதலன்...!

 
 
 
 
 
 
 
 
 
ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடன்  
அலைந்து கொண்டிருக்கிறேன்...  -- அதைத்தவிர  
வேறென்ன செய்ய முடியும் என்னால்...?  
காற்றல்ல .... காதலன்...!  

Tuesday, 14 August 2012

மரணம் தாண்டியும் வாழும் காதல்…!


















  • பெயர்ந்து விழுந்த ” இரு ” செதில்கள் …
    பாழடைந்த கல்லறை என்றே -
    பலருக்குத் தெரியும்…..

  • உனக்காக – நான்…
    கண் திறந்து காத்திருப்பது
    எனக்கு மட்டுமே புரியும் ….!

  • கணவனோடாவது வருவாயா …. ?
    கண்ணீர் சிந்த – என்
    கல்லறைக்கு ….!

ஏசு எனும் மானுட ரட்சகர்….!

  • மனிதம் கொன்று மரித்துப்போனமக்களுக்காக . . .
    மரணம் கொண்டு மரணம் வென்ற
    மானுட தெய்வம் . . .
  • உயிரோடிருந்தும் உயிர்பில்லாதமக்களுக்காக . . .
    உயிர் துறந்தும் உயிர்ததிருக்கும்
    உயர் தெய்வம் . . .
  • முப்பது காசுக்காக காட்டிக்கொடுத்தமக்களையும் . . .
    காத்து நிற்க்கும்,
    கருணை தெய்வம் . . .

இதயம் காதலுக்குப் பின்....

 
 
 
 
 
 
  
 
என்னுடைய இதயம்   
எனக்காக - அன்றி   
அவளுக்காக துடிக்கிறது...!

அதிசயம்…!

 
 
என்னவளின் உருவில்   
எதிரே வந்து நின்றது   
இத்தனை நாளாய்   
உருவம் இல்லாமலிருந்த - என்னுயிர் ...!  

இது என்ன மாயம்…..!



சண்டையிட்டுபேசாமலிருந்த இரு மாதங்களும்
இரு நொடிகள் ஆயின….
உன் முகத்தில்
சிரிப்பைக் கண்ட போது…!

உலகில் உள்ள அத்தனைப் பெண்களும் ...













 
உலகில் உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு... 

அம்மா திட்டும் போதும் சிரிக்கிறேன் நான்...
அரை மணி நேர அர்ச்சனைக்குப் பின்னும் கேட்டேன்,
"அவ்வளவு தானா அம்மா ? " 

இத்தனை நாளாய் , முறைக்கக் கூட
யோசித்த நடத்துனரும் - கேட்கிறார்
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா...? மேல ஏறுடா..."  

இயந்திரத்தனமாய் இருந்தவனிடமும்
இதயம் இருக்கிறது என்பதை
கண்டு பிடித்துச் சொன்னவளே... 

உலகில்
உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு...
 

அன்பே …



                                                  நீ -
                         என்னை காயப்படுதுகிறாய்..  
                         இருந்தும் சிரிக்கிறேன் ...!  
                         காயப்படுத்துவதற்காகவாவது என்னருகில் ,  
                         இருக்கிறாயே என்று எண்ணி...!

காலமெல்லாம்

  • காலமெல்லாம் காதல் வாழ்க…!
    காதல் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது !
    இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…

 
  • கருவறைக்குள் பிறந்து – இன்றுவரை
    காதலர்கள் கல்லறைக்குள் புகுவதேன் ?
    இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…
     
  • தன்னிலை மறந்து தறிகெட்டோடுவொர் கூட,
    தடுமாறாமல் வாழும் போது…
    தான் கொண்ட காதலுக்காக
    தன்னையே தரத்துணியும்
    காதலர்களுக்கு மட்டும் கண்ணீரோ ?
    இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…
     
  • காதலர்களை உரமாக்கி
    காதலர்களின் கல்லறைகளில் – காதல்
    காலமெல்லாம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது…
    இனிமேலாவது காதலர்கள் வாழட்டும் – ஆம்
    காதலர்களோடு காதலும் வாழட்டும் !
                                                                – என்றும் அன்புடன்
                                                                    சு.இராஜசேகரன்

திரிசங்கு சொர்க்கம்


வற்றிவிட்ட காவிரியைப்போல
வற்றித்தான் விட்டது – கண்ணீரும்
என் கண்களில்…
எங்கோ என் மனதில்,
பதிந்துவிட்ட பிம்பம் – பரவிக்கிடகிறது
பரிதவிக்கும் உயிர் முழுதும்…

நீ -
இருக்கிறாய் என்றெண்ணி
இறுமாந்திருக்கவும் முடியவில்லை…
இல்லை என்றெண்ணி
இன்னுயிர் விடவும் மனமில்லை…
திரிசங்கு சொர்கமடி எனக்கு…

வந்துவிடு !
எனக்கு, வாழ விருப்பமில்லை…

வாழ்க்கை
எதுவென்று காட்டுவதற்க்காகவாவது …

வந்துவிடு …
எனக்கு, வாழ விருப்பமில்லை…
நீயில்லாமல் …!
                        
 -இராஜசேகரன்

தோழிக்கு ஒரு மண வாழ்த்து


காலப்பெருவெளியில்
கடந்து வந்த பாதையெல்லாம் ,
பஞ்சு மெத்தையொ
கல்லோடினைந்த  முட்களொ ?!
----
காத்திருந்த கள்வனுக்கு,
வந்ததோர் யோகம் – இனி
கடந்து போகும் பாதையெல்லாம்
பட்டு விரிப்பென மாற
ஆனந்த வெற்றியையே அள்ளித்தர...
----

 ஆருயிர் தோழியெ – நீ
ஆட்கொன்டாய் ஒருவனை !
ஆனந்தமாய் வாழ்க !
அகிலம் வியப்புற …!
----

இனிப்பு


                                        கண்ணீரும் இனித்தது – அது
                                        உனக்காக
                                        உதிர்ந்த போது !

என் தனயன்









 
  • வாழ்வில் வாஞ்சையுற்று – உன்னை
    வழி தொடர்ந்தவனை
    விழி பிதுங்கிட விரட்டியதென்ன … ?
    சொர்க்கத்திற்கு …!
 
  • துரோகத்திற்கு இலக்கணமாய் – நீ
    இருந்தல்ல வலி எனக்கு …
       

  • தியாகம் என நினைத்து
    உன்னை துறந்து …
    விடுதலை வேண்டி
    தன்னை துறந்த – என்
    தனயனின் நினைப்பே – நெஞ்சைப் பிளக்கும்
    உளி எனக்கு !
 
  • அவன் செய்த
    அத்தனையும் – வீணா?
    விடை சொல் எனக்கு !
     

  • பெண்ணே – நீ
    விண்ணைத் தாண்டி வர வில்லை …
    பரவாயில்லை – இனி
    படி தாண்டாமலாவது இரு – அதுவெ
    போதும் எனக்கு …
 
  • உன்னை நம்பிய – இன்னொரு
    உயிராவது மிச்சப்படுமே ….
 
- இராஜசேகரன்

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...