Monday, 17 February 2020

தனிமை பகுதி 8 ( நினைவில் நிஜமாயும், நிஜத்தில் நினைவாயும் நீ )





இது-
நித்திய த்திற்கும்
அநித்தியத்திற்குமான போராட்டம்...

நிரந்தரமானது எது ?
 தற்காலிகமானது எது புரியவில்லை....

மூங்கில் ஒத்த உன்
தோள் நிரந்தரமா...?

உயிர் தீண்டும்
உன் ஸ்பரிசம் நிரந்த ரமா...?

தேடும்போது மாய
பிம்பமாய் மட்டுமே
இருக்கிறாய்....


கண்
மூடும் போது
உண்மையாகவே என்னை
ஏமாற்றுகிறாய்....


கைநீட்டி
தேடும்போது
தலையணையே எனக்காக
இருக்கிறது....

கண்
சிந்தி வழியும்போது
என் படுக்கை விரிப்பே
துடைக்க கிடைக்கிறது....

நீ
துடைப்பாய் எனில்
கண நேரம் கூட மிச்சமில்லாமல்
கண்ணீர் சிந்தி டவே ஆசை!


நீ அழைப்பாய் எனில்
நெருப்பில் என்னை
இடக்கூட ஆசை....

தேடிப்பார்க்கிறேன்
காயமின்றி ஏதுமில்லை....

எனக்கு
வலிக்கிறதா என்று கூட
தெரியவில்லை...

ஆனால்
தேடல் மட்டும்
அப்படியே இருக்கிறது...


 இந்த வலி
பழகிப் போய்விட்டது...

இதயத்தில் அப்படியே
தங்கி விட்டது...


உயிரோடு இருப்பதை விட
 உயிர்ப்போடு இருப்பது
மிக அவசியம் என்று...
 பார்த்து பார்த்து வாழ துடித்தவன் நான்


இன்று -
 உயிர் மட்டும் இருக்கிறது


உயிர்ப்பு இனி
திரும்பிவிடும் என்று
தோன்றவில்லை....


எதற்கோ கட்டுப்பட்ட பொம்மை என ஆயினேன் நான்


 வெந்ததைத் தின்றுவிட்டு
 ஒருநாள் வெந்து விட காத்திருக்கிறேன்

வேறொன்றும் வழி இல்லை எனக்கு

 உனக்காக அதுவும் பழகிப் போயிற்று!

I love you. ❣️



நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...