Saturday, 21 December 2024

சிறுக்கி



 முந்தானை பார்க்கிறாள்

இந்த ஆணை சாய்க்கிறாள் 


முறுவல் பூக்கிறாள்

மனம் பூரணமாக நிறைகிறாள் 


நெற்றியில் சரிந்து விழும் 

கற்றை குழலில்

என் ஒற்றை இதயம்

கொள்ளை அடிக்கிறாள் 


தன் சிற்பம்

என் நெஞ்சில் தானே வடிக்கிறாள்...


ஏக்கம் பெருக்கி

என்னை வதைக்கும் சிறுக்கி...



- ஆக்கம்

- சுந்தர இராஜசேகரன்

Sunday, 15 December 2024

தோழமை

 யாரடா நீ எனக்கு ???


நீ என் என்னவன் இல்லை, 

ஆனால் என்னவாக இருக்கிறாய் 

நீ எனக்கு ???


என் பள்ளியிலும் கல்லூரியிலும் 

வேலை செய்யும் காலங்களிலும் - உன்னை 

சந்திக்கவில்லையே என்று மனது அங்கலாய்க்கிறது, 

 யாரடா நீ எனக்கு ?


உன்னுடைய தோழமை 

என்னுடைய சிறு வயதிலிருந்தே 

 கிடைக்கவில்லையே என 

மனம் பெருமூச்சு விடுகிறது, 

யாரடா நீ எனக்கு ? 


உன்னிடம் பேசும் போது 

நான் நானாக இருப்பதை உணர்கிறேன், 

யாரடா நீ எனக்கு ?


என் உணர்வுகள் வார்த்தைகளாக 

எவ்வித திருத்ததமும் இன்றி உன்னை வந்தடைகிறது, 

 யாரடா நீ எனக்கு ?


உன்னை கண்டதும் 

சிறு பிள்ளை நீண்ட நேரம் கழித்து 

பெற்றோரை பார்த்தது போல் மனம் 

ஆனந்த வெள்ளத்தில் துள்ளுகிறது, 

யாரடா நீ எனக்கு ?


அது எப்படி? 

தொலைதூர தொலைபேசியின் வாயிலாகவே 

என்னை சொல்லொண்ணாத மகிழ்ச்சிக்கு ஆளாக்கினாய், 

யாரடா நீ எனக்கு ? 


உன்னிடம் பேசலாம் பேசலாம் 

என்ன வேண்டுமென்றாலும் 

பேசிக்கொண்டே இருக்கலாம், 

யாரடா நீ எனக்கு ?


என்னுடைய துன்ப காலத்தில் 

என் அருகில் இல்லையானாலும் 

எப்படியடா தொலைதூர தூணாய் நின்றாய், 

யாரடா நீ எனக்கு ?


நாம் பேசும் போது 

என் மனமும் முகமும் வாடி இருக்கையில் 

நீ கண்டுகொள்ள தவறியதில்லை, யாரடா நீ எனக்கு ?


எங்கேயடா போனாய் இத்தனை காலம் !!!

 உன் தோழமையை எனக்கு தர 

ஏன் இவ்வளவு தாமதம், 

யாரடா நீ எனக்கு ?


அடுத்த பிறவி நமக்கு இருக்கும் பட்சத்தில் 

அப்போதாவது என் வாழ்க்கையில் 

சிறு வயது முதலே உன் தோழமை வேண்டும் என்று 

என்னை நினைக்க வைக்கிறாய் !!! (எப்புட்றா மொம்ன்ட்) 

யாரடா நீ எனக்கு ? 


இன்னும் சொல்ல போனால் 

இம்மாதிரி எல்லாம் எழுத தெரியாத 

என்னையே எழுத வைத்த கவிஞன் நீ, 

யாரடா நீ எனக்கு ?


உன்னிடம் பேசும் போதெல்லாம் 

உன்னை நான் வியப்பாக நினைக்க 

தவறியதே இல்லை, 

யாரடா நீ எனக்கு ?


உன் முகத்திலும் மனதிலும் 

மகிழ்ச்சி சற்று குறைந்தாலும், 

அதற்கேற்றற்போல் என் மனம் 

இங்கு கனக்கிறதடா, 

யாரடா நீ எனக்கு ? 


என் வாழ்வில் 

உன் தோழமை கிடைக்க 

என்ன பாக்கியம் செய்தேனோ 

என்று நினைக்க வைக்கிறாயடா !!! 

யாரடா நீ எனக்கு ?


எப்போதும் நீ எனக்கு பிரம்மிப்பாய், 

புதிதாகவே தோன்றுகிறாய், 

யாராட நீ எனக்கு !!! 


என் அப்பன் ஈசனுக்கு 

நன்றி கூறிக்கொண்டே இருக்கிறேன் 

உன் தோழமையை எனக்கு அளித்ததற்கு, 

யாரடா நீ எனக்கு ? 


நீ என் என்னவன் இல்லை, 

ஆனால் என்னவாக இருக்கிறாய் 

நீ எனக்கு ???


ஒரு வேளை 

எனக்கான என்னவனாக 

இருப்பதை தவிர்த்து, 

மற்ற எல்லாமாகவும் 

நீ எனக்கு இருக்கிறாயோ !!!!

நீ என் மனம் உற்ற உயிர் தோழனோ? 

யாரடா நீ எனக்கு ? 


இவ்வளவு சிந்தித்தும் 

எனக்கு விளங்கவில்லை, 

நீயே சொல் யாரடா நீ எனக்கு ???


எப்படியோ இருடா - ஆனால் 

எப்போதும் இப்படியெல்லாம் இருடா !!!


- காயத்ரி செல்வராஜ்

காட்டுப்பாக்கம். சென்னை

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...