Sunday, 27 August 2023

துனைவியும் உழைப்பும் முதுமையும்

 காலமெல்லாம் சுமந்த சின்னங்கள் 

துணையாக வரும் அவளின் எண்ணங்கள்

இன்னும் கூட உழைக்க

 என் வாழ்வின் வண்ணங்கள்


அன்னாடம் காச்சி கர சேத்தோமே

அப்படியே தான் இன்னிக்கும்...

ஆமா நீ சொல்லு-நாம

கர சேந்துட்டோமா இப்ப...?


அது என்னவோ போகட்டும்

நீ இருக்கயில எனக்கு

வேற என்ன வேணும் சொல்லு?


வெயிலு சுட்டாலும் பரவால்ல

உன் கூட நடக்குறதே சொகம்!

உரிமையில திட்டு வாங்கி 

தித்திப்பா வாழ்ந்திருப்பேன்!

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...