Monday, 2 March 2026

கண்களால்

 அவள் கண்களால்

மொத்தமும் கிழி பட்டும்

 நித்தமும் துடிக்கிறதேனோ?


 நெஞ்சே 

உன் மோட்சம் 

அவள் முத்தத்திலா?

மொத்தத்திலா?


எத்தனை சக்தி அவள்

 மாய வேலுக்கு!?


அவளுக்கென்ன 

எல்லாம் முடியும்


மயில் போல தோன்றி - எனக்கு 

வெயில் போல காந்தி 

கண் வேலால் குத்தி

குறிப்பொண்டும் இல்லாமல் 

நான் மட்டும் கத்தி


புன் நகை ஏதும் காட்டாமல்

நகைப்புக்கு என்னை ஆக்கி


நிஜ முக்தி ஒன்று தான் 

இன்னும் எனக்கு பாக்கி!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...