உடலில் காமம் தீர்ந்து போனாலும்...
உயிரில் உன் மீதான காதல் தீராதடி....
உயிரோடு இருக்க உணவு காரணமோ....
ஆம் எனில்
நான் உயிர்ப்போடிருக்க நீ தான் காரணம்....
மாயை என்றார்கள் உலகத்தை...
மறு பரிசீலனை செய்வேன்
மறுஜென்மம் வரை....
மலர் பூங்கோடியே உன்னால்
பிறை நிலவே....
என்னை பினை கைதியாக்கியவளே....
மிஸ் யூ குட்டி....💓
Tuesday, 13 November 2018
தனிமை ( பகுதி 5 )
Saturday, 16 June 2018
எங்கப்பா
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
😍Happy Fathers day 😍
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
*எங்கப்பா*
........................
அப்பா...
தன் பசி பொறுத்து என் பசி போக்கியவர்....
எனக்காக அவாமானப்பட்டும் அகத்தில் மறைத்தவர்
அப்பா...
ஒவ்வொரு ரூபாய்க்கும் என்ன மதிப்பு என
என் இதயத்தில் எழுதியவர்...
அப்பா..
முன்னே தவிர்த்து
பின்னே என் பெருமை பேசும்
ஒரே உள்ளம்...
அப்பா...
நீங்கள் ஆசைப்பட்ட படி
வாழ்ந்து விட முடியுமா
என்று தெரியவில்லை....
அப்பா....
நீங்கள் ஆசைப்பட்ட படி
வாழ்கிறேனா என்று கூட
தெரியவில்லை....
ஆனாலும் அப்பா....
நீங்கள் பயந்தபடி மட்டும்
வாழ்ந்து விட கூடாதென...
இதயத்தில் ஒரு வெளிச்சம்...
அதை
ஏத்தி வச்சதும் நீங்கதான...அப்பா...
தனியா
கூப்பிட்டு வச்சி எதுவும்
சொல்லி குடுத்தாப்ல நெனவில்ல...
ஒம்ம
பாத்தே நான் கத்துக்கிட்ட
விசயங்களுக்கும் அளவில்ல...
துரோகத்த கூட
சிரிச்சி கிட்டே கடந்து போக
உங்களால மட்டுந்தான் முடியும்...
எஞ்சாமி....
துரொகிப் பயலுவோ...
நாடிவந்தாக்கா ஓடிப்போயி உதவி சேய்ய...
அன்ப கொட்டி ஆதரிக்க..
அப்பா ஒன்னத்தவிர
ஒருத்தராலயும் ஆவாது ஊருக்குள்ள...
ஏமாளியின்னு கூட...
நேனச்சிருக்கேன் சில நேரம்...
தயவு சேஞ்சு மன்னிக்கோனும்...
எங்கப்பா இதயத்தால
இமயமுன்னு எனக்கு தெரியும்...
காய்ச்சு நிக்கும் தோப்பு மரம்...
கல்லால அடிபட்டும்...
யாரயும் நொந்ததில்ல....
கனி கொடுக்க மறந்ததில்ல...
எங்க அப்பாவும் அப்படித்தான்...
என்னால கூட அப்படி
வாழ முடியுமான்னு தெரியவில்ல....
கொறயில்லாத மனுசனில்ல...
கொற இல்லேன்னா அவன் மனுசனே இல்ல...
எப்படி இருந்தாலும் எங்கப்பா போல அழகனில்ல...
நீங்க பேசின தமிழ் பேசித்தான...
மேடையில ஜெயிச்சேன்....
படிக்கும் போதே... நான்...
ரேடியோ பொட்டியில பேசுனேன்....
எப்பயாச்சும் நானு
யாருக்காச்சும் உதவி செஞ்சா....
அது சத்தியமா நானில்ல...
எங்கப்பா நீங்கதான்....
உங்க ரத்தம் தான அத உள்ளருந்து சொல்லுது...
தந்தையர் தினமுன்னு...
கொண்டாடும் போது....
ஏன்னே தெரியல எங்கம்மா
ஒங்கள... நன்றி பொங்க நினக்கிறேன்...
எஞ்சாமி அப்பாவ....
தாங்கி நிக்கும் தேவதை..
நீங்கதான எங்கம்மா....
அம்மா நீ அப்பாவ
எப்பவும் போல பாத்துக்க....
அப்பா சிரிச்சாக்கா...
பூத்து நிக்கும் எம்மனசு....
அம்மாவ புரிஞ்சி அப்பாவும் நடந்துக்கனும்...
ஒங்கள விட்டாக்கா எனக்கு ஒறவுன்னு யாரிருக்கா...
கூடவே இருக்க குடுத்து வக்கலன்னாலும்...
நெஞ்சுகூட்டுல எங்கப்பாவ...
நெறச்சு வச்சிருக்கேன்...
வயித்துல என்ன சொமக்கலன்னாலும்...
மனசுல என்ன சுமக்குற சேவல்
சாமிதான்எங்கப்பா....
என் வயித்து சோத்துல
எம்பேர எழுதுனது ஈசனுன்னாலும்....
எம்பேருள்ள சோத்த
என் வயித்துல போட்டது...
நீங்கதான... எங்கப்பா....
உங்கள வாழ்த்த ...
எனக்கொரு யோக்கியத இல்ல....
ஒங்க கால என் தலயால தொட்டு சொல்லுரேன்...
அப்பாக்கள் தின வணக்கமுங்க...
எப்பவும் நானு..
திமிரா சொல்லுவேன்...
*சுந்தரமூர்த்தி தங்கவேலு* எங்கப்பா...
ஐ லவ் யூ அப்பா....
by
Rajasekaran Sundaramoorthy
Saturday, 12 May 2018
தனிமை ( பகுதி 4 )
உண்மையில் காதல் ஓர் அற்புதமான உணர்வு....
என்றோ இந்த உடலை உதறி இருக்க வேண்டிய என்னையும் உயிர்ப்புடன் உலவ வைத்தது....
ஏக்கங்களால் மட்டுமே நிறைந்திருந்த என் மனம்....
சுகமான கனவுகளையும் காண கற்றுக் கொண்டது...
கோபம் கோண்டு மட்டுமே சிவக்கத் தெரிந்த - என் கண்களுக்கு....
அவளைக் கண்டு வெட்கத்தில் சிவப்பது புதிது !
கொடுமையாயிருந்த தனிமை கூட இனிமையாகிப் போனது உன் நினைவுகளுடன்....
எனக்கான வாழ்விடம் இங்கில்லை என்றிருந்த நேரம்...
இதயத்தை எனக்கு தாரை வார்த்தவளே....
கட்டுப்பாடுகளற்ற காதலை எனக்காக கட்டவிழ்த்து விட்டவளே....
எப்போதாவது நான் உன் மீது காதலுடன் இருப்பதாக நீ உணர்ந்தால்....
உன் காதலுக்கு நான் நன்றியோடு நடந்திருக்கிறேன் என மகிழ்வேன்....
உன் அன்பு வெள்ளத்தை தாங்க முடியாத
-சசிராஜன்.
Thursday, 12 April 2018
இசையராஜா
தின்றுவிடாமல் இருக்க
தாயாக இருப்பவரே....
நினைவில்லை....
தாயாக நீ இசை மடி தந்தது நினைவை விட்டு நீங்கிவிட நியாயமில்லை...
தாயே நீ தந்த இசை கேட்காமல் நான் துயின்ற நாட்களுண்டா ?
எந்தை உனை ர(ரு)சிக்கும் ஞானம் பெற்றேன்...
வாழ்க்கைக்கோர் அர்த்தம் பெற்றேன்...
பல நூறு இதயங்கள் நொறுங்காமல் காத்தவரே....
பணம்தேடி ஓடும் பரதேச வாழ்வில்...
மனம் மரித்து விடாமல் காத்து நிற்கும் காவல தெயவமே...
இசை வாணனே...
இசை தெய்வத்திற்கு என் எளிய காணிக்கை
நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
-
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
-
அவள் கண்களால் மொத்தமும் கிழி பட்டும் நித்தமும் துடிக்கிறதேனோ? நெஞ்சே உன் மோட்சம் அவள் முத்தத்திலா? மொத்தத்திலா? எத்தனை சக்தி அவள் மாய ...
-
It's been six years, We are walking together, The awesome journey Praying to Shiva ,for the same to be continued As usual the...
