Tuesday, 6 December 2022

பாரதி


பாரதி


மழித்து திரியும் கூட்டத்தில்

முறுக்கு மீசை வைத்து,//

முப்புரிநூல் அணிவோரில் 

கோட்டும் சூட்டும் போட்டு!//

கஞ்சிக்கு இருந்த தானியத்தை 

காக்கை குருவிக்கு ஈந்து!//

பன்மொழிகள் கற்றறிந்து 

தமிழின் மேன்மை சொன்னவர்!//

தேக வறுமை மெலிவை

 துணியில் மறைத்து .//

தேச நலிவை கவியில் ஏற்றினார்!//

சாக்கடை புழுக்களாய் வாழ்ந்திருந்த//

சமுதாயம் செழிக்க உசுப்பினார்!//

அரிய தமிழ் ஆளுமை கொண்டு// 

எளிய தமிழில் கவிதை தந்து

எல்லோரையும் எழுப்பினார்!//

காலம் மாறி போய்விட்டாலும்

அந்த அடிமை நீங்கிட்டாலும்//

வேறு பல முகமூடி கொண்டு

அடிமை இன்னும் இருக்குதடா!//

தீர்க்கதரிசன பாரதியே !//

இதைத் தெரிந்து தானோ 

கவிதை தந்தாய்.?//

இன்றும் கூட 

உன்னைத்தானே படித்துதானே சொரணை கொண்டோம்!//

கொஞ்சம் பகுத்தறிவாய் 

விழித்துக் கொண்டோம்!//

தமிழ் தாயின் தவப் புதல்வா

நமக்கெல்லாம் வரப் புதல்வா!//


கவிதை ஆக்கம்

சுந்தர இராச சேகரன்

மிச்சிகன். மாடிசன் ஹைட்ஸ் 


Kadhambam-April2023 by Michigan Tamil Sangam - Issuu



Sunday, 21 August 2022

தோழி

தோழி....

எப்போதும் நான் யோசித்து பேச வேண்டியதில்லை...
எதற்காகவும்  என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை....
என் குறைகளுடன் என்னை
ஏற்றுக் கொள்ளும் ஒருத்தி!
உடல் கலப்பு கடந்த
உயிர் இணையாள்!
அவள் திட்டுவது கூட தித்திக்கிறது!
அதட்டுவது கூட ஆசுவாசம் தருகிறது!
அவள் அன்பு என்னை ஆற்றுப்படுத்துகிறது!


அன்புடன்

சுந்தர ராஜசேகரன்

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...