Sunday, 26 December 2021

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவம்

பசியில் எனக்கு யாரோ ஊட்டிய உணவு//
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் !//

ஆபத்தில் கைகொடுத்த நண்பன்//
உடுக்கை இழந்தவன் கைபோல !//

எம்மக்கள் மழலைச் சொல் எனக்கு//
குழலினும் யாழினும் இனிது!//

எம்மக்களை சான்றோர் புகழ்ந்திட //
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் என்னவள்!//

கிராமத்தின் எல்லை தாண்டி நான்// 
கெடில் விழுசெல்வம் கல்வி !//

பசுமை கழனிகளில் கால் வைத்தபோது// 
உழுதுண்டு வாழ்வாரே !//

என் காதல் வாழ்க்கை//
வாலெயிறு ஊறிய நீர்//

என் நட்பு வட்டம்//
காமுறுவர் கற்றறிந்தார்//

நான் விலகி நின்ற நேரம்//
சிற்றினம் அஞ்சும் பெருமை//

எப்போதும் சிரித்த முகமாம் எனக்கு//
இடுக்கண் வருங்கால் நகுதற் பொருட்டு//

என் அனுபவ தெளிவு//
மக்களே பொல்வர் கயவர்//

வள்ளுவம் எடுத்தியம்பிய இன்குறள்//
அல்லாது வேறெது வாழ்விற்கு - வழி ?!//


ஆக்கியோன்

சுந்தர இராஜசேகரன்
நீலப்பாடி கிராமம்
நாகை மாவட்டம்



இந்த கவிதை கதம்பம் இதழில் இடம் பெற்றது.

Sunday, 5 December 2021

இசை!

ஆழ்ந்த அமைதியில் 
இதயத்தின் துடிப்பு !

தனித்து இருக்கையில் 
இலைகளின் அசைவு!

ஆழ்ந்த நித்திரைக்கான முயற்சியில் 
கடிகார முள்ளின் நகர்வுகள்!

தவித்திருக்கையில் 
அணைப்பின் கதகதப்பில் மூச்சு !

மரணத்தின் வாயிலை 
தொட்டுத்திரும்பி 
கண் விழிக்கையில் 
பிறந்த குழந்தையின் அழுகுரல் !

குளிர் உடலை குத்திக்கிழிக்கையில் சருகுகளை கூட்டி எரியும் 
நெருப்பின் ஒலி !

ஆக மொத்தம் 
உடலுக்கும் உயிருக்கும் 
ஆறுதலும் தேறுதலுமாக என்றுமே ...

இயற்கை எப்போதும் 
நம்மோடு பேசும் மொழி !

இறையோடு இசைந்து இருக்க 
எங்கும் இழையோட வேண்டியது - இசை!

.
இறைவன் திருவருளால்!.

RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்


ரிச்மண்ட தமிழ் சங்கத்தின் டிசம்பர் மாத கதம்பம் இதழில் இந்த கவிதையை இடம்பெற செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

Thursday, 9 September 2021

எங்க டீச்சர்

எங்க இந்திராணி டீச்சர்!

இறைவன் ஒருவேளை வாய்ப்பு தந்தால் 
உங்கள் கண்பார்த்து வாழ்ந்த நாட்களை கேட்பேன்!


நீண்ட நெடிய 
காலம் முன்னால் , 
நீங்கள் ஊற்றிய 
அன்பின் நீரிலே 
இன்னும் வாழ்ந்திருக்கிறேன்!


பருவம் வந்த காலத்தில் 
உடலுக்கான இரசாயன மாற்றத்தில் 
பெண்களை பார்த்து பார்வை ஓடிய வேளையிலும்,
அத்தனை பெண்களிலும் நான் 
உங்களின் ஏதோ ஒரு சாயலாவது கிடைக்காதா 
என்றே தேடி இருந்தேன்!


இன்றும் கூட 
மனதிற்கு பிடித்த பெண்களெல்லாம், 
தாயோ, தமக்கையோ, தோழியோ, மனைவியோ... 
நான் உங்களையே அவர்களிலும் தேடி இருக்கிறேன்!


அறிவீர்களா ? இவற்றை எல்லாம்! 
காலம் கடக்கும் முன்னே வாவது 
மீண்டும் காட்டினானே உங்களை!


நீண்ட இடைவேளையில்  - என் காதலை 
மீண்டும் கண்டெடுத்தால் இப்படி களிப்பேனா!?
மனைவின் ஸ்பரிசத்தில் இப்படி சிலிற்பேனா !
அறியேன்!

உங்கள் 
குரலை கேட்ட பின் - என் களிப்பு
இவற்றையெல்லாம் விட 
எங்கோ உயர்ந்து இருக்கிறது!


கொஞ்சம் பொறாமை தான்! 
 என்னால் உங்கள் பிள்ளையாய் 
இருக்க முடியவில்லையே!


பெண்களில் 
இனிமையானவர் களும் இருக்கிறார்கள் என்று
முதல் நம்பிக்கையை விதைத்வர் நீங்கள்!

எப்படியோ டீச்சர் 
என்று கூப்பிட்டு பழகினோம்!
உண்மையில் அம்மா என்ற சொல்லை விட 
ஆழமான பாசத்தோடு தான் அழைத்து விட்டோம்!


அதே விதமாக 
யாரையும் அப்படி 
அழைத்து விட்டதாக நினைவில்லை!

என்றாவது ஒருநாள் - உங்களை 
நேரில் பார்த்து இருப்பேன்!
உணர்ச்சி பெருக்கால் 
நீர் பெருக்கி வழிந்திருப்பேன்!

உங்கள் கால்களை 
ஸ்பரிசிக்க வேண்டி இருப்பேன்!
ஒருவேளை சோறு 
உங்கள் கைகளில் இருந்து 
பிச்சையாக கிடைத்தாலும் 
அமுதம் என்று இருப்பேன்!


எங்களை போல் 
கொடுத்து வைத்தவர்கள் - எத்தனையோ!

எனக்கு உங்கள் அளவுக்கு 
இதுவரை நான் மதித்து விட்ட, 
நேசித்து விட்ட பெண்களில்லை...
இனி வருவதற்கும் வாய்ப்பில்லை!

கொஞ்சம் ஏக்கங்களுண்டு, 
உங்கள் கை உருண்டை சோற்றுகாக , 
தலைகோதும் விரலுகாக, 
உயிரும் உணரும் அன்பு சிந்தும் கண்களுக்காக, 
ஆற்றுப்படுத்தும் சிரிபிற்காக.

எப்படி எழுதினாலும் 
என் உள்ளத்து உணர்வுகளை சொல்ல 
மொழியில் சொற்களில்லை!

என் உயிரின் உணர்வுகள் 
என்னை பெறாத அம்மாவின் (உங்களின்) 
உயிருக்கு தெரியும்!

இறைவன் -
தன் ஒட்டுமொத்த திறமையையும் கொட்டி 
அனுப்பி வைத்தான்! உங்களை...
நானும் கூட கொடுத்து வைத்தவன்! 
இதுவரை பெற்றதற்கும், 
இனி பெற இருப்பதற்கும் நன்றியோடு


நான்

RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்

Friday, 12 March 2021

அன்பை விதைத்து அறுவடை செய் !

அன்பை விதைத்து அறுவடை செய்

அங்கமெல்லாம் புழுதிபட
அகம் எல்லாம் குளிர்ந்து விட
உப்பு படர்ந்து உழைத்தே விட
உவகைதான் எனக்கு...

ஆண் மகனாய் இங்கே அன்பை விதைக்கவும் ஆசைதான்
சோறு ஆக்கி தருவதற்கு அவள் இருக்க
அரிசி வாங்கி வர நான் இருக்கிறேன்

ஆக்கி தருவது அன்பு என்றால்
அரிசி வாங்கித் தருவதும் அன்பு தானே
அதை ஒத்துக்கொள்ள இங்கே எப்போதும் வம்பு தானே
பாவம் ஆண்மகன்...

அன்பிற்கு இனியவளை
அவர் சுமந்த பிள்ளையினை
அன்போடு இருத்தி வைக்க
அகத்தை கட்டிவைத்தேன்

அகத்தில் அழகுபட வாழ்வது அன்பென்றால்
அதை கட்டி முடிக்க
கடன்பட்டு முட்டித்த விப்பதும் அன்பு தானே

ஆககூடி ஒரு சந்தேகம்
அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்ய முடியுமா!?

அவையோர் தான் சொல்ல வேண்டும்!
அடிபட்ட ஆண்மகனின் அழுகை!

அன்பு என்பது தாய்ப்பாலை போல
கொடுத்துப் பெறுவதல்ல
பெறுதற்காய் கொடுப்பதும் அல்ல 
 வருதற்காய் காத்திருப்பதல்ல
கொடுப்பதன் மூலம் பெருகுவதே அன்பு
பெறுதல் மூலம் பொங்கிவழியும்

உலகின் மீது அன்பை கொடுப்பது உனக்கு நீயே கொடுத்துக் கொள்வது
உலகத்தில் இருந்து அன்பை பெறுவது உன்னை நீயே பெற்றுக்கொள்வது

கற்றுக்கொண்டார் கனவு கூட கனி போல் இனிக்கும் 
உணர்ந்துகொண்டார் கண்கள் பனிக்கும்
உணர்ந்து உருகும் உள்ளத்தால் உன் வாழ்க்கையோ செழிக்கும்!

அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்ய முடியுமா!?

முடியும்!

அன்பை பிறருக்கு விதைத்து - அங்கு விளைந்த தா என்று பார்ப்பதை நிறுத்தி

கொடுத்த அன்பு உன்னுள் பெருகி நிற்பதை காணும்போது!

பெற்ற அன்பை ஆகக்கூடி பெருக்கி வாரி வழங்கும் போது உமகுள்ளே
பொங்கி வழிவதை உணரும்போது!

அந்த ஒரு நாளில்

விதைத்த அன்பு விளைந்து நிற்கும்!
வாருங்கள் உலகை அன்பால் நிரப்புவோம்!

Friday, 26 February 2021

தனிமை 14 ( உன் மணம் வீசும் மனம் )

உன் மணம் வீசும் மனம் 
-------------------------------------------------

மணம் வீசும் மனம்,
என் மனதில் என்றும் வீசும்
உன் மணம்!

உனக்குத் தெரியுமா ?
வாழ வேண்டும் என்ற ஆசை 
உன்னாலேயே இன்னும் மிச்சம் இருக்கிறது....

கற்பனையில் வாழாதே என்று 
படித்துப் படித்து உனக்குச்
சொன்ன - நான் ...

உன்னை -
கற்பனையில் ஸ்பரிசிக்க பழகிக்கொண்டேன்....
கற்பனையில் ரசிக்கவும் பழகிக்கொண்டேன்...

சில நேரங்களில் , அல்ல அல்ல
பல நேரங்களில் 
கற்பனையிலேயே வாழவும்
கற்றுக் கொண்டேன்....

எங்கோ ஒரு மூலையில்
உன் விருப்பப்படி - நீ
வாழ்கிறாய் என்பதைவிட
எனக்கு 
மகிழ்ச்சியைத் தருவது
வேறு எதுவும் இல்லை...

என் பயமெல்லாம் -
நிஜத்தில்
உன் தேவை
எனக்கு இல்லாமலே
போய் விடுமோ என்பதல்ல....

என் தேவை உனக்கு
இல்லாமலே போய்விடுமோ
என்று தான்...

பொருளுக்கு அலைந்திடும் 
பொருளற்ற வாழ்க்கை யா! -

என்
அன்புக்கினியவர்களுக்காக
நான் வாழும் 
பொருளுக்கான வாழ்க்கையா....?

என்னவெல்லாமோ சொல்லவேண்டும்...
உணர்வுகளும் கொஞ்சம்
வலிகளும் உண்டு...

ஆனால் வார்த்தைகள்
வந்து விழ 
வழியைதான்
காணவேயில்லை...

என் மனத்தில
உன் மணம் வீசாத நொடிகளுமில்லை!


ஆக்கியோன்

RJ ராஜா (எ) சுந்தர இராஜசேகரன்
விர்ஜினியா




படிக்க பட்டது.


ரிச்மண்ட் தமிழ் சங்கம் கதம்பம் இதழில் பிப்ரவரி 2022 வெளியிடப்பட்டது.


Thursday, 14 January 2021

ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு - இப்படித்தான் 
சொல்லிக்கிட்டு இருக்கிறது 
என் தமிழ்ச் சமுதாயம்

வடமொழி எழுத்தில்- எங்கள் 
தமிழ் அடையாளம்
நான் மீட்டு அழைப்பேன்
அது மீள துடிப்பேன்
சொல்லுவோமா சல்லி கட்டு என்று!

வீறுகொண்டு நாங்கள் 
ஏறு தழுவினோம்
மஞ்சு விரட்டி - மாமன் 
மகளின் மனதில் ஏறினோம்!

வீரம் காட்ட - காளையின் 
திமிலை பிடித்தோம்
களைப்புத் தீர - எங்கள் 
தமிழை குடித்தோம்!

வீரம் விளைந்தது - 
எங்கள் மண்ணைக்  
காளைகளின் கொம்பு 
குத்திப் பிளந்தது!

கொம்பில் கட்டியிருந்த சல்லி 
வம்பில் தழுவிய வீரனின் கையில் ....
அவன் வெற்றியைச் சொல்லி !

மரபு ஆகிய வீரம் - எங்கள் 
மரபு அணுவிலும் இருக்கும் !
காலம் கடந்து போனாலும்...
தேசம் கடந்து நின்றாலும்
வேளை வரும்போது - வந்து
வேலோடு நிற்கும்...

இன்று சில குஞ்சு குளுவாங்கள்
காளையைக் கண்டதில்லை
கழனி யிலும் கூட 
கால் வைத்ததில்லை !

ஆனாலும் தேவை வந்த போது
இளைஞனோடு மழலை மாறா 
குழந்தையும்  குதித்து வந்தது !

மரபை காக்க, 
மறைத்து நின்ற திரை விலக்க,
பறை கொண்டு படை திரட்டி,
மறவன் ஆகி நின்றது !
நித்திய பசியும் மறந்து 
பத்திய உணவு உண்டு !
தகிக்கும் மணலில் - நெஞ்சம் 
கொதித்து நின்றது!
ஆகச்சிறந்த அழுத்தத்தை 
அகிலத்திற்கு தந்தது!

பண பலம் கொண்டு 
அரசியல் சூழ்ச்சி 
தந்தவருக்கு எல்லாம்
பாடம் சொல்லித் தந்தது....

இன்று-
கழனி அறியாக் 
குழந்தை இல்லை
மஞ்சுவிரட்டை அறியா 
மைந்தனும் இல்லை!

குமரிக் கண்டத்திலே 
அழிந்து போயிருந்தாலும்
மரபு எங்கள் மரபணுவை விட்டு 
அசைந்து கொடுக்கவில்லை !

அகில உலகமே அமைதியாக காத்திரு
தமிழ் கொண்டு ! வீரம் கொண்டு !
ஆகச் சிறந்த தத்துவம் கொண்டு !
எங்கள் இயல்பை மீட்டெடுத்து
மீண்டு வருகிறோம்

இயற்கையோடு இயைந்த தமிழ்ச்சமூகம்
வந்தாருக்கெல்லாம் வரம் தரும் சமூகம்
உலகெங்கும் பரவி நிற்கும் உன்னத சமூகம் 

ஓராயிரம் பேர் உலகை அழிக்க நினைத்தாலும்
சுயநலம் கொண்டு சுற்றித் திரிந்தாலும்
காத்திட வந்து நிற்கும் எங்கள் சமூகம் !

கல் தோன்றி 
மண் தோன்றா காலத்தே 
முன் தோன்றிய மூத்த சமூகம் !
நம் தமிழ்ச்சமூகம் !

நன்றி வணக்கம்.
வந்தே மாதரம்!

- இவன்

சுந்தர இராசசேகரன்.


#தமிழ்அமெரிக்காபொங்கல் 
#TamilAmericaNetwork 
#TamilAmericaTV 
#தமிழ்அமெரிக்காடிவி 
#TamilAmericaChannel 
#PongalCompetitions 
#TamilAmerica 
#தமிழ்அமெரிக்கா 
#PongalinUSA 
#americanpongal 
#கவிதை 

இந்த 2021 பொங்கள் கவியரங்கத்தில் எனக்கு வாய்ப்பளித்து 

முதல் பரிசையும் 

அள்ளித்தந்த தமிழ் அமெரிக்கா-Tamil America தமிழ் அமெரிக்கா - Tamil America 

பங்கு பெற்ற கவிஞர்கள் அத்துணை பேருக்கும்

என்னை மேடை ஏற்றி முதலில் அழகு பார்த்த ஆசிரியை அம்மா கமலாம்பாள் திருவாரூர் அவர்களுக்கும்

நன்றி!

காணொளி உங்கள் பார்வைக்கு!




நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...