ஆழ்ந்த அமைதியில்
இதயத்தின் துடிப்பு !
தனித்து இருக்கையில்
இலைகளின் அசைவு!
ஆழ்ந்த நித்திரைக்கான முயற்சியில்
கடிகார முள்ளின் நகர்வுகள்!
தவித்திருக்கையில்
அணைப்பின் கதகதப்பில் மூச்சு !
மரணத்தின் வாயிலை
தொட்டுத்திரும்பி
கண் விழிக்கையில்
பிறந்த குழந்தையின் அழுகுரல் !
குளிர் உடலை குத்திக்கிழிக்கையில் சருகுகளை கூட்டி எரியும்
நெருப்பின் ஒலி !
ஆக மொத்தம்
உடலுக்கும் உயிருக்கும்
ஆறுதலும் தேறுதலுமாக என்றுமே ...
இயற்கை எப்போதும்
நம்மோடு பேசும் மொழி !
இறையோடு இசைந்து இருக்க
எங்கும் இழையோட வேண்டியது - இசை!
.
இறைவன் திருவருளால்!.
RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்
ரிச்மண்ட தமிழ் சங்கத்தின் டிசம்பர் மாத கதம்பம் இதழில் இந்த கவிதையை இடம்பெற செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.
அருமை அட்டகாசமான கவிதை
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!
Delete