அவளின் அருகாமை அற்ற மெத்தையும் எனக்கு முட்படுக்கை!
அவளின் நினைவால் ஆழ்ந்த தூக்கம் இல்லை.... இரவில்
அவளை காணாமல் பகலில் விழித்திருக்க மனமில்லை....
ஆனந்தமாக வாழ்ந்திருக்க வும் வழி இல்லை!
யாருமின்றி தனித்து இருந்தும்...
நான் தவித்து இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை!
எனக்கு ஆறுதல் சொல்ல எவரையும் காணவில்லை!
என் மீது குற்றம் காண கோடி மக்கள்!
அதில் நான் ஆறுதலுக்காக தேடியவர்கள் முதல் வரிசையில்!
என்னை நினைத்து சிரிப்பதா...
என் நிலையை நினைத்து சிரிப்பதா...
எது எப்படியோ.... அழுவதை விட
சிரித்து வைப்போம்!
No comments:
Post a Comment