நீ எழுதி தரும் அந்த நாளை
எனக்கு சொல்லியது....
நீ படித்து படித்து
சொல்லி அனுப்பியும்
மறந்துவிட்டு வந்து - அசடு வழியும் அந்த நாட்களின் நினைப்பு என்னை கிள்ளியது…
உன்னை ஒருநாளாவது நினைக்காமல் இருந்து விட வேண்டும் என்று ….
இயன்ற வரை முயன்று முயன்று தோற்கின்றேன்- ஆமாம்
உன் நினைப்பு என் இதயத்தை முட்டி தள்ளுகிறது….
அன்று நமக்கு கல்யாணம் ஆகி இருக்கவில்லை…
உன்னை நான் கண்களாலேயே நான் வாரி அள்ளியதும்…
அற்புத சிரிப்பாலே நீ என் இதயத்தை கிள்ளியதும்…
கனவில் உன்னை கண்டு நான் துள்ளியத்தும்….
இதையெல்லாம் நினைத்து என்னை நானே எள்ளியதும்…
என்னவென்று சொல்ல – சசி ❣️
காலம் மாறலாம்…
என் கடமைகளும் மாறலாம்…
காதல் மட்டும்…
நீ
எப்போதும் எனக்கு திகட்டா தித்திப்பு…
போடி….❣️

No comments:
Post a Comment