Tuesday, 15 October 2019

தனிமை ( பகுதி 7 )





அவள் தூரமாக இருக்கும்போது பார்ப்பதற்கு பிடித்தது....

அவள் கேட்க தயாராக இல்லாதபோது உரக்க கத்தி காதல் சொல்ல வேண்டுமென துடித்தது.....


கைக்கு எட்டுமோ என்று இருந்தபோது தெரியாமல் அவள் கை தொட்டது பிடித்தது...

கத்தரி வெயில் உயிரை வாட்டும் போது கூட காற்றில் வரும் அவள் வாசம் பிடித்தது....


இன்று கைப்பிடித்த பின்னரும் கைக்கு எட்டாத தூரத்தில் நீ...

கானா தூரத்தில் உட்கார்ந்து கொண்டு காற்றில் உன் வாசம் தேடுகின்றேன் நான்...


இதை தனிமை என்று கூறுவதா இல்லை அதையும் தாண்டி....


எது நடந்தாலும் அதில் எங்கோ உனக்கான ஒரு நினைவு ஒளிந்தே இருக்கிறது...


 இதயத்தில் நினைவுகளில் ஏன் எல்லாவற்றிலும்...
என்னோடு கூடவே நீ....

ஆனால் தனித்து இருப்பதை போன்ற ஒரு வலி எப்போதும்...

இருந்தும் நான் சிரித்து இருக்கிறேன்...
இல்லையில்லை சிரிப்பில் அந்த வலியை மறைத்து இருக்கிறேன்....


அன்புடன்
ராஜ்

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...