உண்மையில் காதல் ஓர் அற்புதமான உணர்வு....
என்றோ இந்த உடலை உதறி இருக்க வேண்டிய என்னையும் உயிர்ப்புடன் உலவ வைத்தது....
ஏக்கங்களால் மட்டுமே நிறைந்திருந்த என் மனம்....
சுகமான கனவுகளையும் காண கற்றுக் கொண்டது...
கோபம் கோண்டு மட்டுமே சிவக்கத் தெரிந்த - என் கண்களுக்கு....
அவளைக் கண்டு வெட்கத்தில் சிவப்பது புதிது !
கொடுமையாயிருந்த தனிமை கூட இனிமையாகிப் போனது உன் நினைவுகளுடன்....
எனக்கான வாழ்விடம் இங்கில்லை என்றிருந்த நேரம்...
இதயத்தை எனக்கு தாரை வார்த்தவளே....
கட்டுப்பாடுகளற்ற காதலை எனக்காக கட்டவிழ்த்து விட்டவளே....
எப்போதாவது நான் உன் மீது காதலுடன் இருப்பதாக நீ உணர்ந்தால்....
உன் காதலுக்கு நான் நன்றியோடு நடந்திருக்கிறேன் என மகிழ்வேன்....
உன் அன்பு வெள்ளத்தை தாங்க முடியாத
-சசிராஜன்.
No comments:
Post a Comment