Monday, 8 January 2024

என் இளமையின் நினைவுகள்

சாக்கின் நிறத்தில் 
ஒரு கால்சட்டை
உற்றுப்பார்த்தால் தெரியும் 
பின் பக்க ஓட்டை
சற்றே மஞ்சள் தோய்ந்த ஊக்கு 
போட்ட மேல்சட்டை
மதிய உணவுக்கு கொண்டு 
செல்வேன் சிறு தட்டை

பயந்து பயந்து 
ஏழை என்ற எண்ணத்திலேயே 
சென்ற பள்ளி வாழ்க்கை!

ஆறுதலாக வந்த 
தேவதையாக எங்கள் 
தொடக்கப்பள்ளி ஆசிரியை!

முதல் முதல் என்னையும் நம்பி 
மேடை ஏற்றிய தமிழ் ஆசிரியை!

கல்லூரி வந்து 
ஆங்கிலவழி யில்
விழி பிதுங்கி 
நின்ற போது வந்த எங்கள் 
ஆங்கில ஆசிரியர்!

நினைக்கிறேன் 
இன்றும் நன்றியோடு!

இளமை காலம்!
என் இனிமைக்காளம்!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...