திருச்சிற்றம்பலம்
பழந்தமிழ்ப்புலவர்
பு.ப.மாசிலாமணி முதலியார்
அவர்களால் இயற்றப்பட்டு
1904 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
புதுப்பாளையம்
அருள்தரும் அங்கயற்கண்ணி உடனமர் அருள்மிகு அகத்தீசுவரர்
தோத்திரப் பாமாலை எனும் நூலில் உள்ள
சிவசோடச நாமாவளி
சிவ சிவ சங்கர அகத்தீசா
சிவகுரு தற்பரா ஜகத்தீசா
தவமுனியோர்களும் தொழும் ஈசா
பவமதையொழித்திடும் பிரகாசா
ஆனந்த நர்த்தன மிடும் பாதா
அருமாமறை முறை யிடும் போதா
அகத்தீசனை நிதம் போற்றுவரே
இகத்தினில் தொல்வினை மாற்றுவரே
சோமனை சூடிய சுந்தரனே
சுரரிடர் தீர்த்த கங்காதரனே
காலனை யெரித்திட்ட கங்காளா
பாமரனென்வினை தீர்த்தாளா
அகத்தீசாவென வல்லவரே
ஜகத்தினவர் மிக நல்லவரே
அகத்தீசனையகம் வைத்தவரே
சுகத்தினில் வெகுநலம் மெய்த்தவரே
அகத்தீசாவென நாடுவரே
அந்தமாம் சாயுச்யம் கூடுவரே
அகத்தீசனை நினை மோனியரே
அருளது பெறலாம் ஞானியரே
அகத்தீசனை தொழு பெரியவரே
ஆனந்த சுகத்துக் குரியவரே
அகத்தீசாவென எண்ணுவரே
அருட்பாலாமிர்தம் உண்ணுவரே
அகத்தீசாவென சொல்பவரே
அந்தகன் றன்னையும் வெல்பவரே
அகத்தீசாவென நின்றவரே
ஆணவமும் மலம் வென்றவரே
அகத்தீசனைப்பணி பக்தர்களே
அருளது பெறற்குரி முக்தர்களே
பரஞ்சுடர் தரிசனம் கண்டவரே
பாவமனைத்தையும் விண்டவரே
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment