Saturday, 30 May 2020

தனிமை - 10 ( அவளோடு கழிந்த இரவுகள் )




அவளோடு கழிந்த இரவுகள்...
உண்மையில் அப்படி ஏதும் 
என் நினைவில் இல்லை....!

தனிமையில் ஆழ்த்திய - இந்த
வாழ்க்கைக்கு தெரிய வாய்பில்லை...
பிரதி ஒரு நொடியும் - அவள்
நினைவுகளில் நான் 
பிணைந்தே வாழ்ந்திருக்கிறேன் என்று...

அவள் அருகே இருந்தாலும் 
இல்லாவிட்டா லும்...
அவள் இருப்பை - நான் 
ஏதோ ஒன்றில் உணர்ந்து கொண்டே 
இருக்கிறேன் !

அவளின் 
ஒவ்வொரு நொடிகளையும் - நான்
பிரதி எடுத்து வைத்திருக்கிறேன் - அதனால் ...

தனியே நினைத்திருக்க ...
அவளோடு கழிந்த இரவுகள் என்று - ஏதும்
என் நினைவில் இல்லை !


 அன்புடன்
*சுந்தர இராஜசேகரன்.*

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...