Monday, 13 April 2020

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனையாளே !

கடந்த காலம் - நான்
கடந்து வந்த காலம்
என்று நினைத்து இருக்கையில்

போடா - உன்னை
கடந்து சென்ற காலம்
என்று யாரோ சொன்னது போல் பொறி தட்டியது

சரி போகட்டும்

பருவ காலத்தில்
பயிர் செய்ய ஏனோ ஆசை இல்லை

இன்று பகிர்ந்து கொள்ள இயலா எத்தனையோ நோக்கங்கள்

 குடும்பத்தை பெரிதாக்கி கொள்ள குறைந்த பட்ச்ச ஆசை கூட இருக்கவில்லை

பெற்றோரை தாங்கி நிற்பதனை தவிர பெரிதாக யேதும் நினைத்திருக்க வில்லை....

ஏதோ வெந்ததை தின்று வெந்து போகும்படி விதிக்கப்பட்டு விட்டது என்ற படி சென்று கொண்டிருந்த என்னில்...

எண்ணிகூட பார்க்கா வண்ணம் வந்ததோடு
வாழ்க்கையில் வண்ணமும் பூசி விட்டவளே ....

காமம் தாண்டியும் கனநேரம் கூட என்னை பிரிந்திராமல்...

இதயத்தில் இறங்கி விட்டவளே...

என் இருண்டு கிடந்த இதயத்தில் விளக்கேற்றிய வின்மீனே...

என் இதயம் கூட அழகானது என்று எனக்கே எடுத்து காட்டியவளே...


ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் எனக்கு புதிதாகவே தெரி கிறாய்...

அது எப்படி ?

ஆச்சரியமாக இருக்கிறது! சுமார் ஆறு வருடம்...

ஆற்று வெள்ளம் போல் சென்று விட்டது!

நேற்று பார்த்தது போல் இன்றும் புதியவளே நீ எனக்கு....

தேகம் சுருங்கிய பின்னரும் எனக்கு நீ தேனேன இருப்பாய்!

உன் இருப்பில் நான் இரும்பென இருக்கிறேன்...

என் இதய வலி உன் வலிகளை இங்கு எனக்கு உரைக்கும்!

கவனமாய் இரு! உன்னால் மட்டுமே நான் உடைந்து விடாது இருக்கிறேன்!

இது நாள் வரை உனக்கு பிடித்ததை செய்து விட முயற்சி மட்டுமே செய்திருக்கிறேன்!

முடிந்ததா! முடிவு உன் கையில்!

பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்து என் வண்ண மயிலுக்கு
ஒரு பிறந்த நாள் வாழ்த்து!

ஒவ்வொரு நாளும் உன் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்து இருக்கட்டும்.

இறைவன் உன்னை இதயத்தில் வைத்து காக்கட்டும்!

இறைவா நீ என்னை காப்பதும்! என்ன வளை காப்பதும் ஒன்றே!

காத்திரு என்னவளையும் !
அவளை காத்து இருப்பதால் என்னையும்!

நல்வாழ்த்துக்கள்! நங்கை நல் லாளே !

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...